இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். அப்போது பேசிய அவர்; தமிழகத்தில் 458 கல்லூரிகளில் 1,01,877 பொறியியல் படிப்பு இடங்கள் உள்ளன. 199.67 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவி சஸ்மிதா முதலிடம் பெற்றுள்ளார். நவநீத கிருஷ்ணன் என்ற மாணவன் 199.67 மார்க் பெற்று 2-வது இடம் பிடித்தார். 199.5 மார்க் பெற்று காவ்யா என்ற மாணவி 3-வது இடம் பிடித்தார். //tneaonline.org இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய கட்-ஆப் மதிப்பெண்கள் அறியலாம் என கூறினார். மேலும் பேசிய அவர்; அக்.1 முதல் 5ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

அக்.8 முதல் 27 வரை நான்கு கட்டங்களாக பொதுக்கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஜி.இ.ஆர் (GER) எனப்படும் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதம் தற்போது 51% ஆக உயர்ந்துள்ளது. சூரப்பா தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது. அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்தாலும் அவர் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது எனவும் கூறினார்.

Related Stories:

>