தமிழகத்தில் ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிழகத்தில் தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படு்கிறது. ஆனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் மட்டும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் தினசரி தொற்று ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 1,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5, 791 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நேற்று மட்டும் 96,102 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,791 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில்1280 பேர், செங்கல்பட்டில் 296 பேர், திருவள்ளூரில் 202 பேர், காஞ்சிபுரத்தில் 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 3,544 பேர் ஆண்கள். 2,247 பேர் பெண்கள். இதுவரை வரை 3 லட்சத்து 50 ஆயிரத்து 462 ஆண்கள், 2 லட்சத்து 30 ஆயிரத்து 316 பேர் பெண்கள், 30 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 5,706 பேர் குணமடைந்துள்ளனர். இது வரை 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 19 பேர், திருப்பூரில் 8 பேர், சேலத்தில் 6 பேர், கோவை மற்றும் கடலூரில் 5 பேர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, வேலூர் தலா 3 பேர், செங்கல்பட்டு, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், கன்னியாகுமரி, மதுரை, நாகை, நீலகிரி, சிவகங்கை, தென்காசி, தேனி, திருவாரூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்று மொத்தம் 80 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Related Stories: