அக்டோபர் 5 முதல் 10,12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம்...!! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் அக்டோபர் 5 முதல் 10,12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் 9,11ம் மாணவர்களுக்கு வகுப்பு தொடங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார். கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும், குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

லாக்டவுனால் மக்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்துள்ளனர். வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் வரும் 30ஆம் தேதி வரை அமலில் இருந்தாலும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அன்லாக் 4.0 தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 21 முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது.

ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, ஆந்திரா, கர்நாடகா, அசாம், மிசோரம், நாகலாந்து, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரியில் அக்டோபர் 5 முதல் 10 ,12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 9 ,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: