வியாசர்பாடி துணை மின் நிலையம் ரிமோட் முறையில் இயக்கம்: மின்வாரியம் திட்டம்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு பிரிவுகளில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு ேதவையான மின்சாரம் அனல், காற்றாலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உற்பத்தி செய்து, துணை மின் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும். இங்கு, மின்சாரத்தின் அழுத்தம் குறைக்கப்பட்டு இணைப்புகளுக்கு விநியோகம் செய்யப்படும்.  இந்த  துணை மின் நிலையங்களை புதிய தொழில்நுட்பங்களால் மேம்படுத்தும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் வியாசர்பாடி துணை மின் நிலையத்தை ரிமோட் முறையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வியாசர்பாடி 230 கே.வி துணை மின் நிலையத்தை ரிமோட் முறையில் இயக்க  திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 99 லட்சத்து 55 ஆயிரத்து 689 ரூபாயை செலவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தலைமை அலுவலகத்தில் இருந்தே சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்தை இயக்க முடியும். தற்போது அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது, என்றார்.

Related Stories: