சென்னை பெருநகர பகுதியில் விபத்துகளை குறைக்க சாலை பாதுகாப்பு திட்டம்: ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் விரைவில் ஆய்வு

சென்னை: சென்னை பெருநகர பகுதியில் விபத்துகளை குறைக்கும் வகையில் சாலை பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆய்வு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

சென்னையில் வாகனம் இல்லா போக்குவரத்தை ஊக்குவிக்க மாநகராட்சியின் சிறப்பு திட்டங்கள் துறை மற்றும் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ் நடைபாதைகள் அமைக்கவும், 111 கி.மீ சாலை மறு வடிவமைப்பு திட்டமும் செயல்படுத்தபட உள்ளது.    இதன் ஒரு பகுதியாக சென்னையில் விபத்துகளை குறைத்து பாதுகாப்பான நகரமாக மாற்றும் திட்டத்தை சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் செயல்படுத்தபட உள்ளது. இந்த தொடர்பாக விரிவான ஆய்வு ஒன்று விரைவில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளில் சென்னையில் 11.9 சதவீத விபத்துகள் பதிவாகிறது. விபத்துகளில் ஏற்படும் மரணங்களில் 10.3 சதவீத மரணங்கள் சென்னையில் நடைபெறுகிறது. இதை குறைக்கவும், சென்னையை போக்குவரத்திற்கு பாதுகாப்பான நகரமாக மாற்றவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  இது தொடர்பாக சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவன தலைமை செயல் அதிகாரி ராஜ் செருபால் கூறியதாவது: சென்னை பெருநகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும், சாலை விபத்துகளை விபத்துகளை குறைக்கவும், எந்த மாதிரியான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும், தற்போதைய நிலை தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.

இந்த ஆய்வை நடத்தும் நிறுவனம் டிரான்ஸ்போர்ட் பார் லண்டன் எனும் நிறுவனம் லண்டன் நகரில் விபத்துகளை குறைக்க செயல்படுத்திய திட்டங்களை அடிப்படையாக கொண்டு இந்த திட்டத்தை தயார் செய்யும். இதனை அடிப்படையாக கொண்டு சென்னை சாலை பாதுகாப்பு மையமும் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் முதலிடம்

இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. மத்திய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில்தான் அதிக விபத்துகள் பதிவாகி வருகிறது.

Related Stories: