அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்தால் பருப்பு விலை கிடுகிடு உயர்வு

விருதுநகர்:  அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்தில், வணிகர்கள் இருப்பு வைக்க கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இதனால், பயறு, பருப்பு விலை விறுவிறுவென உயர்ந்துள்ளது. உளுந்தம்பருப்பு (100 கிலோ) மூட்டைக்கு 1,300, துவரம்பருப்பு மூட்டைக்கு 1,500, கடலைப்பருப்பு மூட்டைக்கு 1,000, பொரிகடலை (55 கிலோ) மூட்டைக்கு 300 என விலை உயர்ந்துள்ளது. இதன்படி, கடந்த வாரம் 8,300க்கு விற்ற ஆந்திரா உளுந்து இந்த வாரம் 8,800க்கு விற்பனையானது. இதேபோல, 7,800க்கு விற்ற பர்மா உளுந்து 8,800, 10,700க்கு விற்ற உருட்டு உளுந்தம்பருப்பு லைன் 12,000, 10,200க்கு விற்ற உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா 10,800, 9,100க்கு விற்ற தொளி உளுந்தம்பருப்பு 10,100, 6,500க்கு விற்ற துவரை 8,000, 10,000க்கு விற்ற துவரம்பருப்பு 11,500, 9,500க்கு விற்ற துவரம்பருப்பு உடைசல் 11,000, 7,000க்கு விற்ற 100 கிலோ கடலைப்பருப்பு மூட்டை 8,000, 4,125க்கு விற்ற 55 கிலோ பொரிகடலை மூட்டை 4,400க்கும் விற்பனையானது.

Related Stories: