திண்டுக்கல் அருகே 300 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 பேர் கைது

திண்டுக்கல்:  திண்டுக்கல் அருகே சரக்கு வாகனத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைதாகினர்.ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி ரவளிபிரியா உத்தரவின்பேரில் போலீசார் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரை அருகே தங்கம்மாபட்டி செக்போஸ்ட்டில்  எஸ்பி தனிப்படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி உள்ளே இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தில் சோதனை நடத்தினர். இதில் 200 கிலோ கஞ்சா விற்பனைக்காக கொண்டு சென்

றது தெரிந்தது. பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்படி சீலப்பாடியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தனிப்படையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக திண்டுக்கல் ஆர்எம் காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சீலப்பாடியை சேர்ந்த சோணைமுத்து (31), கிழக்கு கோவிந்தபுரத்தை சேர்ந்த பரணி (33), என்.பாறைப்பட்டியை சேர்ந்த யுவராஜ் (33), ஜெய்சங்கர் (24), திருநகரை சேர்ந்தராகவன் (27), பாடியூர் புதுப்பட்டியை சேர்ந்த பாண்டியப்பன் ஆகிய 7 பேரை வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 7 பேரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். பறிமுதல் செய்த கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: