எஸ்பிபி மறைவு கோணேட்டம்பேட்டை கிராம மக்கள் சோகம்

சென்னை:  திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே  கோணேட்டம்பேட்டை கிராமத்தில்  தெலுங்கு பிராமணர் குடும்பத்தில்  சாம்பாமூர்த்தி-சகுந்தலம்மாள் தம்பதியரின் 6 குழந்தைகளில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஒருவர். தனது  சிறுவயதில் பள்ளிப்பட்டு பகுதியில்  கழித்தார்.  பொறியாளர் ஆக வேண்டும் என்று வாழ்நாள் லட்சியமாக கொண்ட எஸ்.பி.பி  அந்த பாதையிலிருந்து விலகி பின்னணி பாடகராக  வாழ்க்கை பயணத்தை தொடங்கி 11 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உலகம் முழுவதும் சிறந்தத பாடகராக போற்றப்பட்டார்.   பாடகராக உலகம் முழுவதும் போற்றப்பட்டாலும், நேரம் கிடைக்கும் போதேல்லம் சொந்த கிராமத்திற்கு வந்து  பழைய நண்பர்களுடன் சகஜமாக பேசி  பழகுவதில் ஆர்வம் கொண்டவராக கிராமமக்கள் பெருமையுடன் குறிப்பிட்டனர்.

 எஸ்.பி பாலசுப்பிரமணியம் என்பதை விட கோணேட்டம்பேட்டை பாலு  என்ற கிராமமக்கள்  பாசத்துடன் அழைப்பதை பெருதும் விரும்புவதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது 71வது பிறந்தநாளை குடும்பத்தினர்  மற்றும் கிராமமக்கள் மத்தியில் சொந்த கிராமத்தில் கொண்டாடிய தருணத்தில் குறிப்பிட்டிருந்தார். சொந்த கிராமமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் சொந்த பணத்திலிருந்து அமைத்து கொடுத்தார். மேலும்,  பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். அவர் மறைவு கோணேட்டம்பேட்டை கிராமமக்களிடையே பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: