பாஜ தலைவர் வீட்டு முன்பு கட்சி கொடியை தூக்கிலிடும் போராட்டம்: சென்னை பெண் கைது

சென்னை: பாஜ மாநில தலைவர் எல்.முருகன் வீட்டு முன்பு கட்சிக்கொடியை தூக்கிலிடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை மேற்கு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நர்மதா. இவர், அவ்வப்போது நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார், வீட்டில் நண்டுவிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக அவர் கைதானார். இந்நிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் கோயம்பேடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள எல்.முருகன் வீட்டின் முன்பு பாஜ கொடியை தூக்கிலிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், நர்மதாவை கைது செய்து எம்.ஜி.ஆர். பேருந்து நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், பா.ஜ. மாநில தலைவர் எல்.முருகன் ரவுடியிசத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். அதன் காரணமாகவே போராட்டம் நடத்தியதாக கூறினார்.

Related Stories: