கன்னட திரையுலகினருக்கு போதைப்பொருள் சப்ளை தீபிகா படுகோனேவுக்கும் தொடர்புள்ளதாக தகவல்: என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு

பெங்களூரு: கன்னட திரையுலகினருக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக கைதான சீரியல் நடிகை அனிகாவுடன் கர்நாடகத்தை சேர்ந்த இந்தி நடிகை தீபிகா படுகோனேவிற்கு தொடர்பு இருப்பதும், கோர்டு வேர்டு பயன்படுத்தி சேட்டிங்கில் ஈடுபட்டிருப்பதாக என்.சி.பி விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகினருக்கு போதை பொருள் சப்ளை செய்த சீரியல் நடிகை அனிகா உள்பட 3 பேரை கடந்த மாதம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூட்டாக சேர்ந்து கைது செய்தனர். ரூ.2 கோடி மதிப்பிலான போதை மாத்திரை இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

என்.சி.பி விசாரணையில் பிடியில் உள்ள இவர் கொடுத்த தகவலை வைத்து, நடிகைகள் ராகிணி, சஞ்சனா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இதே கும்பல் காட்டன்பேட்டை போதை பொருள் விருந்து நிகழ்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து சி.சி.பி விசாரித்து வருகின்றனர். இருவேறு கோணங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த வழக்கு விசாரணையில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில், பானஸ்வாடியில் கைதான அனிகாவிடம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி )அதிகாரிகள் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதில் போதை பொருள் சப்ளையர் அனிகாவுடன், கர்நாடக மண்ணின் மகளும், இந்தி திரைப்பட நடிகையுமான தீபிகா படுகோனே வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் ஈடுபட்டு போதை பொருள் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இதற்காக அனிகா மற்றும் தீபிகா கூட்டாளிகள் டி.எஸ்.என்.ஜே.கே என்ற கோர்டு வேர்டை பயன்படுத்தி உள்ளனர். அதாவது, டி என்றால் தீபிகா, எஸ்-ஸ்ரத்தா கபூர், என்- ஹர்ஷா நம்ருதா, ஜே.கே- ஜெயா சகாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

இவர்கள் சேட்டிங் மூலம் எவ்வளவு போதை மாத்திரைகள் வேண்டும்.

எங்கெங்கு கொண்டு வந்து தரவேண்டுமென சேட்டிங்கில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெங்களூருவில் ஏராளமான போதை விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பது மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது குறித்த ஆதாரங்கள் என்.சி.பிக்கு கிடைத்துள்ளது. இதனால் என்.சி.பி அதிகாரிகளின் முழு கவனமும் இந்தி நடிகை தீபிகா படுகோனேவின் பக்கம் திரும்பியுள்ளது. இது தொடர்பாக எந்நேரத்தில் வேண்டுமாலும் தீபிகாவிற்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.

Related Stories: