கண்டலேறு நீருக்காக கஷ்டபட்டும் வீண் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் ஓடையாக மாறியது: நீரோட்டம் தடைபடுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னை: தமிழக பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் சேதமடைந்து ஓடைபோல் காட்சி அளிக்கிறது. மேலும், புதர்கள் மண்டி இருப்பதால் தண்ணீர் செல்வதில் தடைபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறது. இந்நிலையில் கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு தமிழகத்திற்கு கடந்த 18ம் தேதி தண்ணீர் திறந்து விட்டது. இந்த தண்ணீர் 3 நாட்களில்  தமிழகத்திற்கு வந்தடைந்தது. எனினும் ஆந்திர மாநில பகுதிகளான வரதயபாளையம், கடூர், சின்ன பாண்டூர், சத்தியவேடு, ஜீரோ பாயின்ட் நுழைவாயில்  போன்ற பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் புதர்கள் மண்டி கிடக்கிறது.

மேலும், தமிழக பகுதிகளான தொம்பரம்பேடு, அம்பேத்கர் நகர், அனந்தேரி, கெருகம்பாக்கம், தேவந்தவாக்கம், கலவை  ஆகிய பகுதிகளில் கால்வாயின் சிமென்ட் சிலாப்புகள்  பெயர்ந்து கிடக்கிறது. பல இடங்களில்  கரைகள் சரிந்து கால்வாய் ஓடைபோல குறுகியதால் நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. மேலும், தண்ணீரின் அளவு தற்போது கால்வாயில் நிரம்பிச் செல்கிறது. மேலும், தண்ணீரின் வரத்து அதிகமானால் கால்வாய் உடையும் அபாயம் உள்ளது. இதற்கு, சம்பந்தப்பட்ட துறையினரின் அலட்சியமே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: