விஜிபி தங்கக் கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவின் சிலை மனிதனைப் பற்றிய தவறான தகவலுக்கு விஜிபி நிர்வாகம் மறுப்பு

சென்னை: விஜிபி தங்கக் கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவின் சிலை மனிதனைப் பற்றிய தவறான தகவலுக்கு விஜிபி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், உலகப் புகழ் விஜிபி தங்கக் கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவில் மக்களை மகிழ்விப்பதற்காக நிற்கும் சிலை மனிதன் மக்கள் மத்தியில் பிரபலமானவர். கொரோனா ஊரடங்கால், இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளில் வியாபாரம் முடங்கி பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் எங்கள் விஜிபி சிலை மனிதன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக பொய்ப்பிரச்சாரம் பரப்பி வருவது மனம் வருந்தச் செய்யும் செய்தியாகும்.

அவர் உயிரோடு இருக்கிறார். ஆனால், அவரைப்பற்றிய சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டே இருக்கிறது. சிலை மனிதனுக்கு கொரோனாவோ அல்லது எந்தவித நோயோ இல்லை. எங்கள் விஜிபி சிலை மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றார். இன்று காலை 11 மணிக்கு எடுத்த நிழற்படத்தை இங்கே வெளியிடுகின்றோம். மீண்டும் விஜிபி பொழுதுபோக்கு பூங்கா பயன்பாட்டிற்கு வரும்போது, மக்களை மகிழ்ச்சியூட்ட எங்கள் சிலை மனிதர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை விஜிபி நிர்வாகம் இதன்வழி தெளிவுப்படுத்தகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: