வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் செய்தது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு? பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் குன்றத்தூரைச் சேர்ந்த பெண், மாயமான தனது பத்தாம் வகுப்பு படித்த மகளை மீட்டுத்தரக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொளி காட்சி மூலம் மாணவியை ஆஜர்படுத்திய போலீசார் மாணவி ஆடை  தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததார். அவர் அங்கு பணியாற்றி வந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பதை மாணவியிடம் மறைத்தும் ஏமாற்றியும் திருமணம் செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, கைதானோர் எத்தனை பேர் என கேள்வி எழுப்பினர்.இதுதொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: