திருத்தணி பகுதியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு

திருத்தணி: திருத்தணி பகுதியில் தமிழக சுகாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திடீரென ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.  இதனைத்தொடர்ந்து, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்று,  மருத்துவர்கள், செவிலியர்கள் முழு கவச உடை அணிந்து பணியாற்றும்போது ஏற்படும் சிரமங்களை உணர்ந்து தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சென்றார். அப்போது, கோயிலுக்கு வரும் பக்தர்களை சமூக இடைவெளியை பின்பற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய சொல்லவேண்டும் என்று அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.  பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருத்தணியில் முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு அதிகம் பேருக்கு இல்லை. முகக்கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றார்.

Related Stories: