மத்திய அரசை கண்டித்து பண்ருட்டியில் 25ந் தேதி ரயில், சாலை மறியல் போராட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

பண்ருட்டி: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் விவசாய சங்கங்கள் ஆலோசனை கூட்டம் பண்ருட்டி இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது இதில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப் பாளர் மாதவன் தீர்மானங்களை முன்மொழிந்து சிறப்புறையாற்றினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார்,

இந்திய தேசிய காங்கிரஸ் நகர செயலாளர் முருகன், சந்திரசேகரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட துணைசெயலாளர் ஜெய்சங்கர், நகர செயலாளர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் கார்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் உத்திராபதி, அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் லோகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் குமரகுரு, துணைத்தலைவர்கள் சரவணன், கணேசன், அண்ணாகிராமம் துணைத்தலைவர் ஆதவன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020 வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல்) அவசர சட்டம் 2020 உள்ளிட்ட சட்டங்களை நிறைவேற்றியதை கண்டித்து நாடு தழுவிய அளவில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு செப்டம்பர் 25ம்தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டமும், சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்கள். பண்ருட்டி வட்டத்திலும் வெற்றிகரமாக நடத்த வேண்டும், இதுகுறித்து துண்டுபிரசுரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: