கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட சொத்து, தொழில் வரி வசூல் பணி மீண்டும் தொடங்கியது: மாநகராட்சி அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட சொத்து மற்றும் தொழில் வரி வசூலிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் ஆண்டுக்கு ரூ1000 கோடி கிடைத்து வந்தது. தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்த்தப்பட்ட காரணத்தால் ஆண்டுக்கு ரூ1200 கோடி சொத்துவரி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தால் சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி உயர தொடங்கியது. ஒவ்வொரு நிதி ஆண்டு இறுதியில் அதாவது மார்ச் இறுதியில் மொத்த சொத்து வரி தொடர்பான தகவல் வெளியிடப்படும்.

இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக பலர் சொத்து வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மாநகராட்சி ஊழியர்களால் சொத்து வரி வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சொத்து வரி வசூல் தொடர்பாக கடந்த 17ம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை ஆணையர் மேகநாத ெரட்டி, வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு, கூடுதல் மற்றும் உதவி வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், ெசாத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன்படி வரி வசூலிப்பவர்கள் தினசரி 25 வீட்டை ஆய்வு செய்து சொத்து வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தவிர்த்து தொழில் வரி வசூலிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக 2019-20 நிதி ஆண்டுக்கான சொத்து, தொழில் வரி, தொழில் உரிமம் ஆகியவற்றை வரும் 30ம் ேததி வரை அபராதம் இன்றி செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 2019-20ம் ஆண்டில் சொத்து வரி ரூ928 கோடியும், தொழில் வரி ரூ349 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: