எம்எல்ஏ விடுதி பணிக்கு முன்தேதியிட்டு அரசாணை கேட்ட கோரிக்கையை நிதித்துறை நிராகரிப்பு: டெண்டரை ரத்து செய்ய பொதுபணி துறை முடிவு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு சார்பில் எம்எல்ஏக்கள் விடுதியில் சாலைகளை மேம்படுத்துவது, நடை பாதை அமைப்பது, எம்எல்ஏக்களுக்காக இறகு பந்தாட்ட அரங்கம் அமைப்பது, மழை நீர் வடிகால்வாய் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.4.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பொதுவாக இது போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட பிறகு தான் டெண்டர் விட வேண்டும். ஆனால், இப்பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், பொதுப்பணித்துறை சார்பில் கடந்த ஜூன் 18ம் தேதி டெண்டர் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு தனியார் நிறுவனமும் ேதர்வானது.

இதை தொடர்ந்து அந்த நிறுவனத்துடன் பொதுப்பணித்துறை ஒப்பந்தம் போட்டு உடனடியாக பணியை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் டெண்டருக்கு ஒப்பந்தம் ேபாட முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் நிதித்துறைக்கு முன்தேதியிட்டு அரசாணை வெளியிடுமாறு கோரிக்கை வைத்தது. ஆனால், பொதுப்பணித்துறையின் கோரிக்கையை நிதித்துறை நிராகரித்துவிட்டது. இதனால், பொதுப்பணித்துறை ஏற்கனவே விட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், புதிதாக ெடண்டர் விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: