தமிழகத்தில் புதிதாக 5,516 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 60 பேர் மரணம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து மொத்த பாதிப்பு 5.41 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 60 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழக சுகாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று 86,073 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,516 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் சென்னையில் 996 பேர், செங்கல்பட்டில் 283 பேர், திருவள்ளூரில் 207 பேர், காஞ்சிபுரத்தில் 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 993 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 699 ஆண்கள், 2 லட்சத்து 15 ஆயிரத்து 264 பேர் பெண்கள், 29 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 5,206 பேர் குணமடைந்தனர்.

இதுவரை 4 லட்சத்து 89 ஆயிரத்து 479 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 703 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 60 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதில் சென்னையில் 12 பேர், செங்கல்பட்டில் 7 பேர், கோவை மற்றும் சேலத்தில் தலா 6 பேர், திருவள்ளூரில் 5 பேர், கடலூர், ஈரோட்டில் தலா 3 பேர், காஞ்சிபுரம், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், தருமபுரி, திண்டுக்கல், மதுரை, ராணிப்பேட்டை, சிவகாசி, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்று மொத்தம் 60 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8811 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* தனியார் ஆய்வக அனுமதி தற்காலிக ரத்து

கொரோனா சோதனை செய்ய திண்டிவனத்தைச் சேர்ந்த ராம்சாஜ் ஹெல்த் சர்வீஸ் என்ற தனியார் ஆய்வகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: