மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சென்னை:  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  நேற்று  மத்திய  அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் உள்ள இரண்டாம் பிரிவு மற்றும் மூன்றாம் பிரிவு நகரங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும், பிபிஓ மற்றும் தொழிற்சாலைகளில் தகவல்ெதாழில்நுட்ப சேவைகளை செயல்படுத்தவும் கூடிய இந்திய பிபிஓ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதற்கான வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை பொறுத்தவரையில் சென்னை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய மென்பொருள் பூங்காக்கள் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.

இதன் மூலம் 7 ஆயிரத்து 705 இடங்கள் பிபிஓக்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரத்து 605 இடங்கள் தமிழ்நாட்டுக்காகவும், 100 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்களை இந்திய பிபிஓ மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>