விவசாய விரோத சட்டங்களுக்கு ஆதரவு: விவசாயிகளுக்கு அதிமுக, பாஜ துரோகம்: தலைவர்கள் கண்டனம்

சென்னை: மத்திய பாஜ அரசின் விவசாய விரோத சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் விவசாயிகளுக்கு மாபெரும் துரோகம்  செய்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜ அரசின் விவசாயம் தொடர்பான 3 அவசரச் சட்டங்களால் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் விவசாயிகள் செல்லக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, மூன்று அவசர சட்டங்களையும், மத்திய பாஜ அரசு திரும்பப் பெறவேண்டும். கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): விவசாயிகளுக்கு விரோதமான மூன்று மசோதாக்களை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்திருப்பதானது விவசாயிகளுக்கு செய்திருக்கும் பெருந்துரோகமாகும். மத்திய, மாநில அரசுகளின் இப்போக்கினை எதிர்த்து ஒன்று திரண்டு போராட வேண்டும்.

திருமாவளவன் (விசிக தலைவர்): மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு தீங்கிழைக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதை எதிர்த்து நாடெங்கிலும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சி இப்போது பாஜ கூட்டணி அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இந்த விவசாய விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. ஆனால், இந்த சட்டங்கள் நிறைவேற அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது விவசாய சமூகத்திற்கு பாஜ, அதிமுகவும் இழைத்துள்ள மாபெரும் துரோகமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: