ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ்

தாம்பரம்: சிட்லபாக்கம் ஏரியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வசித்து வரும் 100க்கும் மேற்பட்டோரை, அங்கிருந்து காலி செய்ய தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று நோட்டீஸ் வழங்கினர். அப்போது, உடனடியாக இங்கிருந்து போக சொன்னால் எங்கே போவோம்.  மாற்று இடம் வழங்கினாலும் கொரோனா சூழலில் எவ்வாறு வேறு பகுதிக்கு உடனடியாக செல்ல முடியும், என அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வீடுகளை காலி செய்ய கால அவகாசம் அளித்தனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>