மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு.: அக். 2-ல் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

சென்னை: விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக காவிரி வேளாண் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 மசோதாக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி அக்டோபர் 2-ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணவிரோதப் போராட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் போது 3 மசோதாக்களை அரசு அவசர அவசரமாக நிறைவேற்ற துடிப்பது எதற்கு என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டால் விவசாயத்தில் கார்ப்பரேட் கைகள் ஓங்கும் என்பது விவசாயிகளின் அச்சமாக உள்ளது. மசோதாக்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி காணொலிக்காட்சி மூலம் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் இருந்து கும்பகோணம் விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வெளிநடப்பு செய்தனர். இந்த சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று விவசாயிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories: