கோவையில் பல கோடி வரி ஏய்ப்பு 25 செங்கல் சூளைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை

கோவை: கோவை சின்ன தடாகம், சோமையம்பாளையம், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் 350 செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான செங்கல் சூளைகளில் சரக்கு, சேவை வரி ஏய்ப்பு செய்வதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து மத்திய ஜி.எஸ்.டி. துறை இணை கமிஷனர் கோவிந்தராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். 25க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. சாயிபாபா காலனி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். ஜி.எஸ்.டி செலுத்தாமல் பல கோடி ரூபாய் ஏமாற்றிய கிடைத்த புகாரின்பேரில் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: