ராணிப்பேட்டையில் 2 ஆண்டாக இயங்கிவரும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் குடிநீர், கழிவறை வசதி இல்லை: அதிகாரிகள், ஆசிரியர்கள் தவிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் கடந்த 2 ஆண்டாக இயங்கி வரும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் குடிநீர், கழிவறை வசதி இல்லாமல் அதிகாரிகள், ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளாகி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலகம் கடந்த 2018ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த மாவட்ட கல்வி அலுவலகத்தின் கீழ் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், நிதி உதவி பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், மழலையர், தொடக்க, நடுநிலை உள்ளிட்ட பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலர், கண்காணிப்பாளர்,  துணை கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த அலுவலகத்தில் இதுவரை குடிநீர், கழிவறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் இங்கு பணியாற்றும் அலுவலர்கள் மட்டுமின்றி அலுவலக வேலையாக வரும் பள்ளிகளின் ஆசிரியர்களும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த அலுவலத்தில் உடனே குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தர மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: