பதிவு திருமண நடைமுறையில் மாற்றம்

சென்னை: திருமணம் பதிவு செய்யும் நடைமுறையில் மாற்றம் செய்யும் மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்தின் படி திருமணம் எந்த பகுதியில் நடைபெறுகிறதோ அப்பகுதியின் பதிவாளரின் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும். கடந்த 2019-20ம் ஆண்டில் சட்டப்பேரவையில் பதிவுத்துறை மானியக்கோரிக்கை நடைபெறும் போது, அமைச்சர் கே.சி.வீரமணி, மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்வதை எளிதாக்குவதற்கு சட்டத்தில் திருத்தம் செய்யப்படுமென அறிவித்தார்.

அதன்படி தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதென அரசு முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. இதன் மூலம் திருமணத்தை பதிவு செய்வது மேலும் எளிமையாக உள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: