தேசிய ஊட்டச்சத்து மாத விழா

பொன்னேரி: மீஞ்சூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா போஷான்மா வளர்ச்சி குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இவ்விழா  மாவட்ட துணை ஆட்சியர் பிரவினா குமாரி தலைமையில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் முத்துலட்சுமி. வட்டார விரிவாக்க அலுவலர் அமிர்தவள்ளி ஆகியோர் ஆகியோர் கலந்துகொண்டு ஊட்டச்சத்து மற்றும் போஷான்மா விளக்கம் குறித்து பேசினார். மீஞ்சூர்  வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதா தேவி கலந்துகொண்டு ஊட்டச்சத்து போஷான் மா வளர்ச்சிகுழு பற்றி விளக்கிக் கூறினார். இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுஜிதா. வட்டார திட்ட உதவியாளர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

Related Stories: