கொரோனா விதியை மீறிய 20 ஆயிரம் பேர் சிக்கினர்: சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

சென்னை: கொரோனா நோய் தடுப்பு தொடர்பான விதிகளை மீறியதாக இதுவரை 20 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ. 41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பலர் முகக்கவசம் அணியாத காரணத்திற்காக அபராதம் செலுத்தியவர்கள் என்று அவர்கள் கூறினர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்க தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் பலர் விதிகளை கடைபிடிக்காமல் சுற்றி வருகின்றனர். குறிப்பாக பலர் மாஸ்க் அணியாமல் கூற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கொரோனா தொடர்பான விதிகளை பின்பற்றாதவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.

இதன்படி தனிமைப்படுத்துதலை மீறுபவர்களுக்கு ரூ.500, மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500, நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுவரை 20,163 பேரிடம் ரூ.41,97,225 அபராதமாக வசூலிக்கப்படடுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக முகக் கவசம் அணியாதோரிடம்தான் அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: