திருச்சியில் நோயாளிகள், ஏழைகளுக்கு உதவி: எஸ்ஐயின் மனிதநேயம்

திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் பகுதியில் நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை திருவெறும்பூர் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தன்னார்வலர்களுடன் இணைந்து வழங்கினார்.

கொரோனா ஊரடங்கில் திருவெறும்பூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தன்னார்வலர்களுடன் இணைந்தும், தன்னிச்சையாகவும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதி நேற்று திருவெறும்பூர் சமூக ஆர்வலர் சக்திவேல் என்பவருடன் இணைந்து துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை, அசூர், தேவராயநேரி நரிக்குறவர் காலனி போன்ற இடங்களில் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி, சிறுநீரக நோயாளிகள் மற்றும் கணவனை இழந்த பெண் மற்றும் கணவருக்கு வாயில் உமிழ் நீர் கட்டி வந்ததால் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்ட பெண் உள்பட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஐந்து குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். சப்இன்ஸ்பெக்டரின் மனிதநேயத்துக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருவதுடன் பாராட்டும் குவிந்து வருகிறது.

Related Stories: