ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே அரசு அலுவல் மொழி என மத்திய அரசு அறிவிப்பு: மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக்க முடியாது என திட்டவட்டம்

டெல்லி; ஆங்கிலம், இந்தி தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என மத்திய உள்துறைக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக வைகோ கேள்வி எழுப்பியிருந்தார். இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா? என அவர் வினவியிருந்தார். அதற்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம் ஆங்கிலம் இந்தி தவிர ஏனைய பட்டியல் மொழிகளை அலுவல் மொழிகளாக அறிவிக்கும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மக்களவையில் கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் திரு. வெங்கடேசன் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிக்கும் எண்ணம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் திரு. தோமர் கொரோனா காலத்தில் இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மாத சராசரியாக 12.2 நாட்கள் வேலை வழங்கப்பட்டதாகவும், தமிழகத்தில் 7.6 நாட்கள் வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும், கூறினார். வேலை நாட்களை மேலும் 100 நாட்கள் அதிகரிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திரு. வெங்கடேசன், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு பரிசளிக்க மறுப்பது கிராமப்பூர்வ மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கூறினார். தேசிய சராசரியை விட தமிழகத்திற்கு குறைவாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து தமிழக அரசு எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Stories: