2.97 கோடி பேருக்கு பாதிப்பு...9.38 லட்சம் பேர் பலி.. உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.15 கோடியாக உயர்வு

ஜெனீவா:சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 97 லட்சத்து 14 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 72 லட்சத்து 53 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 866 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 67,87,625

இந்தியா - 49,30,236

பிரேசில் - 43,84,299

ரஷியா - 10,73,849

பெரு - 7,38,020

கொலம்பியா - 7,28,590

மெக்சிகோ - 6,71,716

தென் ஆப்பிரிக்கா - 6,51,521

ஸ்பெயின் - 6,03,167

அர்ஜெண்டினா - 5,77,338

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 2,00,171

பிரேசில் - 1,33,207

இந்தியா - 80,776

மெக்சிகோ - 71,049

இங்கிலாந்து - 41,664

இத்தாலி - 35633

பிரான்ஸ் - 30,999

ஸ்பெயின் - 30,004

பெரு - 30,927

ஈரான் - 23,453

கொலம்பியா - 23,288

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா - 40,61,873

இந்தியா - 38,59,339

பிரேசில் - 36,71,128

ரஷியா - 8,84,305

கொலம்பியா - 6,07,978

தென் ஆப்ரிக்கா - 5,83,126

பெரு - 5,80,753

மெக்சிகோ - 4,75,795

Related Stories: