வீரராகவ பெருமாள் கோயிலில் வெளியூர் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தேவஸ்தான கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசின் உத்தரவின்பேரில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி திறக்கப்பட்டது. அதன்படி பக்தர்கள் தேவையான கட்டுப்பாட்டுடன் தரிசித்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் இரவில் தங்குவதற்கு கோயில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. ஓரளவுக்கு மேல் பக்தர்கள் தரிசிக்க இயலாது. எனவே நாளை (செப்.17) அமாவாசை தரிசனத்திற்காக வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் வருகை தருவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   

Related Stories: