புதிய கல்விக் கொள்கையால் மாநில மொழிகளுடன் இந்தியும் வளர்ச்சியடையும்: அமித்ஷா கருத்து

புதுடெல்லி: இந்தி தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்  கூறியிருப்பதாவது: இந்திய கலாச்சாரத்தில் இந்தி தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதில்தான்  இந்தியாவின் வலிமையே அடங்கியிருக்கிறது. ஆனாலும், நம்மை பல நூற்றாண்டுகளாக ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பதாக இந்தி  இருக்கிறது.பல்வேறு மொழிகள் பேசும் நம் நாட்டில் புதிய கல்விக்கொள்கை சிறப்பான மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. மாநில மொழிகளுடன்,  இந்தியும் சேர்ந்தே வளர்ச்சி  அடையும்.

அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்விநிலையங்களில் உள்ளூர் மொழிகளுடன் இந்தியைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.  பெங்களூருவில் ஆர்ப்பாட்டம்: இதற்கிடையே, தேசிய இந்தி தினம் கொண்டாடப்படுவதை கண்டித்து பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் நேற்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்துக்குள் நுழைந்த கன்னட நவ நிர்மான் அமைப்பினர் ரயில் பலகையில்  எழுதியிருந்த இந்தியை அழித்து எதிர்ப்பை காட்டினர்.

Related Stories: