மாவட்டத்தில் 4 மையங்களில் நீட் தேர்வு: 3145 மாணவர்கள் எழுதினர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 மையங்களில் 3145 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் எழுதுகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தனி மனித இடைவெளியோடு மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 24 மாணவர்களுக்கு பதிலாக 12 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் படப்பை ஆல்வின் இன்டர்நேஷனல் பள்ளியில் 960 மாணவர்களும், சுங்குவார்சத்திரம் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் 685 மாணவர்களும், சந்தவேலூர் மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளியில் 900 மாணவர்கள், குன்றத்தூர் சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் 600 மாணவர்கள் என மொத்தம் 3145 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

Related Stories: