வேளாண் கல்லூரிகளுக்கான கல்விக்கட்டண நிர்ணய குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: வேளாண் கல்லூரிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழு அரசிடம் நேற்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது.  தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்பு தனியார் வேளாண்மைக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் வகையில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் கல்விக் கட்டணக் குழுவை அரசு நியமித்தது.

 இதை தொடர்ந்து, இணைப்பு வேளாண்மைக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 2020-21ம் கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை பரிந்துரை செய்து ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு  தம்முடைய அறிக்கையை வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் சமர்ப்பித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: