கால்வாய்க்கு பள்ளம் தோண்டியபோது 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை:  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மதுரை வடக்குமாசி வீதியில் ஒரு பழக்கடை அருகே வாய்க்கால் தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு  கல்வெட்டு ஒன்று புதைந்திருந்தது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவக்குமார் உள்ளிட்டோர் தொல்லியல் துறைக்கு தகவல்  தெரிவித்தனர். இதன்பேரில் கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டது.    பின்னர் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறுகையில், ‘‘கல்வெட்டின் சிறு துண்டுதான் கிடைத்துள்ளது. இதுவும் தலைகீழாக கிடக்கிறது. 13ம்  நூற்றாண்டு குலசேகர பாண்டியன் காலத்து கல்வெட்டாகும். இடையிடையே பல்வேறு எழுத்துகள் அழிந்துள்ளன.

மதுரை நகரை சொல்லும்போது  மாடக்குளத்தில் மதுரை என்பதுண்டு. இதுவே இங்கும் உச்சரிக்கப்பட்டுள்ளது. மதுரை கோவில் என்ற பொருள்பட பாண்டியர் அரண்மனையை குறிக்கும்  சொல்லும் இடம்பிடித்துள்ளது. இதில் இருக்கும் வர்மன் என்ற வார்த்தை ஜடாவர்மன், மாறவர்மனாகவும் இருக்கலாம். இந்த தமிழ் எழுத்து கல்வெட்டு,  எங்கேயோ இருந்து உடைந்து வந்திருக்கிறது’’ என்றார்.  இந்த கல்வெட்டை மேலும் ஆய்வு செய்திட வேண்டும் என பழமை ஆர்வலர்கள் கோரிக்கை  வைத்துள்ளனர். 

Related Stories: