பெரம்பலூரில் சூறைக்காற்றில் தூக்கி வீசப்பட்ட கோழிப்பண்ணை மேற்கூரை: ரூ.10 லட்சம் சேதம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சூறைக்காற்றில் கோழிப்பண்ணையின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டதில் ரூ10 லட்சம் சேதமானதால் வருவாய்த்துறை  நேரில் விசாரணை மேற்கொண்டனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் தேன்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட சற்று அதிகமாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் மேற்கு,  வடக்கு எல்லையிலுள்ள பச்சைமலை மேலுள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் வேப்பூர் சுற்று  வட்டாரப் பகுதி வயல்களில் தண் ணீர் தேங்கிக் கிடந்தது. அதேபோல் நேற்று முன்தினம் 8ம் தேதி வேப்பந்தட்டை தாலுகாவில் பலத்த மழை  சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்துள்ளது.இதன்படி செட்டிக்குளம் 9மிமீ, அகரம்சீகூர் 10மிமீ, லெப்பைக்குடிகாடு 20மிமீ, புதுவேட்டக்குடி, எறையூர் ஆகியப் பகுதிகளில் தலா 3மிமீ, வி.களத்தூர்  23மிமீ, வேப்பந்தட்டை 53மிமீ என பெரம்பலூர் மாவட்ட அள வில் 121மிமீ மழை பெய்துள்ளது.

இதன் சராசரி அளவு 11மிமீ ஆகும். இந்நிலையில் வி.களத்தூர் சுற்று வட்டாரங்களில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் வி.களத்தூர்  மேட்டுச்சேரி மெயின்ரோட்டில் வசிக்கும் பாலக்கிருஷ்ணன் மகன் குமாரவேல்(42) என்பவர் பிம்பலூர் அருகேயுள்ள தனது வயலில் கோழிப்பண்ணை  அமைப்பதற்காக போடப்பட்டிருந்த நீண்ட ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை சூறைக்காற்றுக்கு இருந்த இடத்திலிருந்து 100 அடிதூரத்திற்கு பறந்து சென்று  தூக்கிவீசப்பட்டது. முக்கால்வாசிப் பணிகளை முடித்து மின் இணைப்புக்காக காத்திருந்த நிலையில், சூறைக் காற்றுக்கு சுக்குநூறாக சிதறடிக்கப்பட்டு  தூக்கிவீசப் பட்டதால் குமாரவேலுவுக்கு சுமார் 10 லட்சம் மதிப்பிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அவரது குடும்பத்தார் வரு வாய்த் துறையினருக்கும், கால்நடைத் துறையினருக் கும் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: