சென்னை: தங்கம் விலை சவரனுக்கு 120 குறைந்து, 39,240க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வந்தது. அதன் பிறகு கடந்த மாதம் 7ம் தேதி முதல் ஒரு வாரம் சற்று விலை குறைந்தது. ஒரு வாரத்திற்கு பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. பின்னர் கடந்த 31ம் தேதி காலையில் தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 27 அதிகரித்து ஒரு கிராம் 4,954க்கும், சவரனுக்கு 216 அதிகரித்து ஒரு சவரன் 39,632க்கும் விற்கப்பட்டது. அதன் பின்பு நேற்று முன்தினம் மாலை முதல் தங்கம் விலை குறையத் தொடங்கியது.