புதிய இந்தியா, புதிய தேவை ஆகியவற்றை புதிய கல்விக் கொள்கை பூர்த்தி செய்யும் : புதிய கல்வி கொள்கை மாநாட்டில் பிரதமர் உரை

டெல்லி: புதிய கல்வி கொள்கை தொடர்பான மாநாட்டில், காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் பள்ளிக் கல்வி பற்றிய இரண்டு நாள் மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் உலகின் ஒவ்வொரு பிராந்தியமும் மாறியுள்ளது என புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். நமது கல்வி முறை மட்டும் பழைய முறைப்படி தொடர்கிறது என கூறினார். நமது புதிய கல்விக்கொள்கை, புதிய இந்தியாவின் தொடக்கம் என கூறினார். பல திட்டங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வசதி கிடைக்கும் என தெரிவித்தார்.

இளைஞர்கள் சக்தி மிகவும் அவசியமாக இருக்கிறது எனவும், குழந்தைப் பருவம் எப்படி இருக்கிறதோ அதுபோலவே அவர்களது எதிர்காலம் அமையும் என கூறினார். எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்த மனிதராக உருவாக்கும் வகையில் கல்விக்கொள்கை என கூறினார். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள கல்விக்கொள்கை வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்தார். மாணவர்களின் உள்ளம், அறிவை அறிவியல் பூர்வமாக கல்விக்கொள்கை வளர்க்கும் என கூறினார். மாணவர்களால் சக மாணவர்கள் பெயரை எவ்வளவு வேகமாக சொல்ல முடியும்? எனவும், தலைவர்களின் படங்கள் பார்த்து மாணவர்கள் வேகமாக பெயரை சொல்லும் அளவிற்கு பழக்க வேண்டும் என கூறினார். 4 சுவர்களுக்குள் மாணவர்கள் படிக்கும் நிலையை மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: