சென்னை : சின்னத்திரை பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கலக்கப் போவது யார், அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. அவருக்கு வயது 42. சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமடைந்த வடிவேல் பாலாஜி, நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து வந்துள்ளார். வடிவேலுவின் உடல் மொழியை பிரதிபலித்து ரசிகர்களால் வடிவேலு பாலாஜி என்ற அன்புடன் அழைக்கப்பட்ட இவர் மதுரையைச் சேர்ந்தவர். சில வாரங்களுக்கு முன்பாக ஷூட்டிங்கில் இருந்த போது, வடிவேல் பாலாஜி மயங்கி உள்ளார். உடனே அவர் மருத்துவமனையை நாடியுள்ளார். அப்போது அவருக்கு மூளையில் ரத்த கசிவு இருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.