நகராட்சி நடவடிக்கை இல்லை தெரு நாய்கள் தொல்லை

கீழக்கரை:  கீழக்கரை நகரில் மீண்டும் தெருநாய்கள் தொல்லைகள் அதிகரித்துள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாய்கள் தெருக்களில் கூட்டமாக படுத்துக் கொண்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் எங்கு பார்த்தாலும் கூட்டமாக  உள்ளதாலும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கொண்டு திரிவதாலும் காலையில் நடைபயிற்சி செல்வர் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். இரவு  நேரங்களில் நாய்கள் கூட்டமாக குறைத்து கொண்டு இருப்பதால் வயதானவர்கள் நோயாளிகளும் குழந்தைகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

இதனால் பொதுமக்கள் நாய்களை கண்டு மிகவும் அச்சத்துடன் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு நாய் கடித்து சிறுவன் இறந்தது குறிப்பிடத்தக்கது. எப்போதும் போல அசம்பாவித நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பாக  உடனடியாக நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்..

Related Stories: