அமைதிக்கான நோபல் பரிசு: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்க நார்வே அதிகாரிகள் பரிந்துரை.!!!

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடனின் வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபல் அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு, யாரொருவர்  நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ, அவருக்குக் கொடுக்கப்பட  வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதியன்று நார்வே தலைநகர் ஓசுலோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னிலையில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில்  வழங்கப்படும் நிலையில், இப்பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான வேதியியல், இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாத நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்-க்கு வழங்க நார்வே அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவுகளை இயல்பாக்குவதற்கான அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதால் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான எரித்ரியாவுடானான சிக்கலான எல்லை பிரச்னையை தீர்ப்பதற்கு அவர் மேற்கொண்ட தீர்க்கமான முயற்சிகளுக்காகவும், அமைதியை ஏற்படுத்தவும், சர்வதேச ஒத்துழைப்புக்காக அவரின் முயற்சிக்காகவும், எத்தியோப்பியா  பிரதமர் அகமது அலிக்கு 2019-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: