ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து ஆந்திராவில் 21ம் தேதி பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு

திருமலை: ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் வரும் 21ம் தேதி முதல் பள்ளிகள், திறந்தவெளி தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின்  4ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து ஆந்திர மாநில அரசு நேற்று  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘வரும் 21ம் தேதி முதல் 9, 10 மற்றும் இன்டர்மீடியட் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பெற்றோரின் எழுத்து பூர்வ ஒப்புதல் பெற வேண்டும். பிஜி மற்றும் பிஎச்டி மாணவர்களும் அதேநாளில் இருந்து கல்லூரிக்கு செல்லலாம். சமூக, கல்வி, விளையாட்டு, மத மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு 100 பேர் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. 21ம் தேதி முதல் திறந்தவெளி தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: