பட்டியல் சமூதாயத்தை சேர்ந்த மூதாட்டியிடம் மோசடி: கோவை பா.ஜ.க., பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்!!!

கோவை:  கோவையில் பட்டியல் சமூதாயத்தை சேர்ந்த மூதாட்டியின் இடத்தை பறித்த குற்றச்சாட்டில் பாரதிய ஜனதா பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. மதுக்கரையை சேர்ந்த கண்ணம்மாள் என்ற மூதாட்டியிடம் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில்தான் பா.ஜ.க., பிரமுகரான ஆறுமுகம் மீது வழக்கு பாய்ந்திருக்கிறது. காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திய தண்டனை சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடனாக மளிகை பொருட்கள் வாங்கியதற்காக ஒரு செட் நிலத்தை கொடுக்குமாறு கேட்ட ஆறுமுகம், பின்னர் 3 செட் நிலத்தை அவரது பெயரில் மாற்றிக்கொண்டு கண்ணம்மாளின் வீட்டை இடித்தார் என்பது குற்றச்சாட்டாகும். இதனை தட்டி கேட்ட கண்ணம்மாளையும், அவரது குடும்பத்தினரையும் சாதி பெயரைச்சொல்லி ஆறுமுகம் இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் சாதி பெயரை சொல்லி அவமானப்படுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

 இதனையடுத்து நில அபகரிப்பு செய்ததாக பாஜக பிரமுகர் மீது மூதாட்டி கண்ணம்மாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பின்னர் நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறையினர் பாஜக பிரமுகர் ஆறுமுகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: