கோரிக்கையை அரசு ஏற்றால் மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி அளிப்போம்; உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: செப்.30 வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்காத காலங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும் என போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து வருகிற 7-ம் தேதி முதல் மாவட்டங்கள் இடையே அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சாலை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தால் மட்டுமே ஆம்னி பஸ்களை இயக்க தயாராக இருப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் 1,184 அரசு விரைவு பஸ்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 524 அரசு விரைவு பஸ்கள் வருகிற 7-ம் தேதி  முதல் இயக்கப்பட இருக்கின்றன. இந்த விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம்  தொடங்கியது. முதல் நாளிலேயே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களின் கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள்:

1. தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான 2 காலாண்டு ( ஆறு மாதம் )சாலை வரியை பேருந்துகளை இயக்காத காலங்களுக்கு முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

2. படுக்கை வசதி உள்ள ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்கனவே சாலை வரி செலுத்தி இயக்காமல் உள்ள சாலை வரியை இனிவரும் காலங்களில் இயக்க அனுமதிக்க வேண்டும்.

3. ஆம்னி பேருந்துகளில் 100% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க பிற மாநிலங்களைப் போல்  தமிழக அரசும் அனுமதிக்க வேண்டும்.

4. குளிர்சாதன வசதி உள்ள ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்.

5. Bank Moratorium செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கு கால அவகாசம் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Related Stories: