இராணுவத்திற்கு சுமைதூக்கி, வழிகாட்டிகளாக செயல்பட்ட 5 பழங்குடியினரை கடத்தியது சீனா: அருணாசலப் பிரதேசத்தில் பரபரப்பு.!!!

இட்டாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 5 பேரை சீன படையினர் கடத்தி சென்றதால் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது. இந்த கடத்தல் சம்பவமானது சுபான்சிரி மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் கடத்தப்பட்டவர்கள் இராணுவத்திற்கு சுமைதூக்கிகளாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டு வந்தவர்களாவர். இவர்களில் 7 பேர் கடத்தப்பட்டதாகவும், இருவர் சீன இராணுவத்தின் பிடியிலிருந்து தப்பி இருப்பதும் தெரியவந்துள்ளது. சர்வதேச எல்லை அருகே சிரா - 7 கண்காணிப்பு பகுதியிலிருந்து 12வது கிலோ மீட்டரில் நாட்சோ என்ற இடத்திலிருந்து பழங்குடியினர் கடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்களை தேடும் பணியில் இராணுவத்துடன் இணைந்து அருணாசலப்பிரதேச போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் கடத்தப்பட்ட இடத்தில், வாகன போக்குவரத்து இல்லை என்றும், அங்கு செல்போன் தொடர்பு முற்றிலுமாக இருக்காது என்றும் போலீசார் கூறியுள்ளனர். ஆனால் காணாமல் போனவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து காணாமல் போன இளைஞர்களில் ஒருவரின் சகோதரர் ஃபேஸ்புக் வாயிலாக அளித்த தகவலையடுத்து கடத்தல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இதனையடுத்து பழங்குடியினர் கடத்தப்பட்டது குறித்து சீனாவின் மக்கள் விடுதலை படைக்கும், சீன அரசுக்கும் முறைப்படி தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக அருணாசலப்பிரதேச கிழக்கு எம்.பி. தபிர்கா கூறியுள்ளார். காணாமல் போனவர்கள் மூலிகை சேகரிப்பில் ஈடுபடும் தொழில் செய்வதும், இதற்காக எல்லை தாண்டி சென்று சிக்கிக்கொண்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: