வன தூர்க்கை சித்தர் பீடம் திறப்பு

செய்யூர்: செய்யூர் தாலுகா, சித்தாமூர் ஒன்றியம் ஆட்டுபட்டி கோட்டை புஞ்சை கிராமத்தில் பிரசித்தி பெற்ற வன துர்க்கை சித்தர் பீடம் கடந்த 5 மாதமாக கொரோன ஊரடங்கால் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், அரசின் உத்தரவுபடி, கொரோனாவில் இருந்து பொதுமக்கள் விடுபட வேண்டி அதிகாலை ஆகம முறைப்படி கோ பூஜை செய்து,  வன துர்க்கை சித்தர் பீடம் திறக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்களை  அனுமதிக்கும் முன்பாக கிருமி நாசினி தெளித்து, தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, அதன்பின்னர் தரிசனத்துக்கு அனுமதித்தனர்.

சித்தர் பீடம் திறக்கப்பட்டதை அறிந்ததும், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். வன துர்க்கை சித்தர் பீடத்தில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை, மஹா வேள்வி பூஜை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வனதுர்கை அடிகளார் வன துர்க்கை தாசன் செய்தார்.

Related Stories: