தமிழகத்தில் செப். 7ம் தேதி முதல் மேலும் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் மேலும் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மேலும் 4 சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்திருக்கிறது. சென்னையில் இருந்து செங்கோட்டை, கன்னியாகுமரி, நாகர்கோவில், மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவிருக்கிறது. ஏற்கனவே சிறப்பு ரயிலாக 9 ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் மேலும் கூடுதலாக 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை செல்லக்கூடிய ரயிலும், எழும்பூர் - கன்னியாகுமரி, சென்னை - மேட்டுப்பாளையம், திருச்சி - நாகர்கோவில் என்ற 4 சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. வருகின்ற 7ம் தேதியிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கக்கூடிய  நிலையில், தெற்கு ரயில்வே பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப ரயில்களை இயக்கி வருகிறது.

அதன்படி மேலும் 4 சிறப்பு ரயில்களை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. நாளை காலை 5:00 மணிக்கு தொடங்கவுள்ள முன்பதிவில் இந்த ரயில்களும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 8ம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் மாலை 5:15 மணிக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுபாளையத்துக்கு தினமும் இரவு 9:05 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. செப்டம்பர் 7ம் தேதி முதல் திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. செப்டம்பர் 10ம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Related Stories: