அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும்: AICTE மின்னஞ்சல் குறித்து அண்ணா பல்கலை. விளக்கம்.!!!

சென்னை: தமிழக அரசு தற்போது கொரோனா சூழலில் உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்திருந்தது. அரியர் வைத்திருக்கக்கூடிய முந்தைய ஆண்டுகளில் அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சியடைய செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பொறியியல் படிப்பு, பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக கருதப்படுகின்ற ஏ.ஐ.சி.டி.ஐ. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றது. அதில் தமிழக அரசு எடுத்துள்ள அனைவரும் தேர்ச்சி என்ற முடிவை ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ளது.

மேலும் முதல் மூன்று ஆண்டு பயிலக்கூடிய மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் தேர்ச்சி அறிவித்தீர்கள் என அக்கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்களை இப்படி ஒரு முடிவில் தேர்ச்சியடைய செய்தது ஏற்க இயலாது என்பது கடிதத்தில் உள்ள முக்கிய அம்சமாகும். இந்த நிலையில் பல்கலைக்கழக தரப்பும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் விதியை மீறினால் எதிர்காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கான அங்கீகாரம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரியர் மாணவர்களின் தேர்ச்சி செல்லாது என்ற AICTE மின்னஞ்சல் குறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, AICTE மின்னஞ்சல் விவகாரம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று சூரப்பா கூறியுள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு இந்த விவகாரத்தில் எந்த முடிவு எடுக்கப்போகிறது என்பது ஆலோசனைக்கு பிறகு தெரியவரும் என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: