இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிப்பு!!

கோலாலம்பூர் : இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக், இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுப்படுத்த மலேசியா நடவடிக்கை எடுத்து வருவதாக அண்மையில் பிரதமர் முஹைதீன் யாசின் கூறி இருந்தனர். உலக அளவிலான கொரோனா பாதிப்பு 37 லட்சத்தை கடந்து இந்தியா 3 இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக

இந்தியாவில் கொரோனா தொற்று நோய்  அதிகரிப்பு விகிதம் காரணமாக மலேசியா அரசு செப்டம்பர் 7ம் தேதி முதல் இந்தியர்கள் மலேசியாவிற்குள்  நுழைவதற்கு தடை விதித்து உள்ளது.

இதே போல் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் குடிமக்களும் மலேசியா நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. இத்தகைய அறிவிப்பால் நீண்ட கால தேர்ச்சி பெற்றவர்கள், மாணவர்கள், வெளிநாட்டவர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.சமீபத்தில்  மலேசியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கான தடையை 2020 ஆண்டின் இறுதிவரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருந்தது. அயல்நாட்டு எல்லைகள் மூடப்பட்டிருப்பது தொடரும் என்றும் அறிவித்து இருந்தது.

Related Stories: