நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் வழக்கமான ரயில், விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு பிறகு, மே 12ம் தேதி முதல் டெல்லி யிருந்து சென்னை, பெங்களூரு, அகமதாபாத், பாட்னா உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேலும் பல சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். இதுகுறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 230 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன, இதில் 30 ராஜதான வகை ரயில்கள் உள்ளன. தேவை மற்றும் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்கள் ஒவ்வொரு  கட்டங்களாக அறிவிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் முன்பு கூறியிருந்தது. இப்போது அன்லாக் 4.0 அறிவிக்கப்பட்டதும், மெட்ரோ ரயில் சேவைகளும் செப்டம்பர் முதல் தொடங்கி, தொழிலாளர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கான அதிக தேவைகள் உள்ளது.

Related Stories: